பாகிஸ்தானுக்கு எதிராக முதல் சதமடித்த இலங்கை கேப்டன்
Kusal mendis 11th test ton in rawalpindi: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் குசல் மெண்டிஸ் சதம் அடித்தார்.
ராவல்பிண்டியில் நடந்து வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ் சதம் விளாசினார்.
இலங்கை அணி 404 ஓட்டங்கள்
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.
மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 404 ஓட்டங்கள் குவித்துள்ளது.
குசல் மெண்டிஸ் சதம்
தனஞ்செய டி சில்வா (Dhananjaya de Silva) 167 ஓட்டங்களுடனும் (20 பவுண்டரிகள்), குசல் மெண்டிஸ் 117 ஓட்டங்களுடனும் (4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள்) களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக குசல் மெண்டிஸ் அடித்துள்ள முதல் டெஸ்ட் சதம் இதுவாகும். மேலும், டெஸ்ட் அரங்கில் அவருக்கு இது 11வது சதம் ஆகும்.
