ஒரே டெஸ்டில் முதல் இரட்டை சதத்தை விளாசிய இரு இலங்கை வீரர்கள்!
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கை வீரர்கள் மதுஷ்கா மற்றும் குசால் மெண்டிஸ், தங்கள் முதல் இரட்டை சதத்தினை பதிவு செய்துள்ளனர்.
முதல் இரட்டை சதம்
காலேவில் நடந்து அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்த டெஸ்டில் தொடக்க வீரரான நிஷன் மதுஷ்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தினை அடித்துள்ளனர்.
Nishan Madushka brings up his maiden double century ?
— ICC (@ICC) April 27, 2023
Sri Lanka batters continue to dominate in the opening session on day four.
Follow #SLvIRE live: https://t.co/H0UZWknheB pic.twitter.com/oFw1ybD1s4
மிரட்டல் கூட்டணி
மதுஷ்கா ஒரு சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் 205 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மதுஷ்கா - மெண்டிஸ் கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 268 ஓட்டங்கள் குவித்தது.
A maiden Test double ton for Kusal Mendis ?
— ICC (@ICC) April 27, 2023
Follow #SLvIRE live: https://t.co/jPQWhtBlp2 pic.twitter.com/TFYKmWCU8z
அதிரடியில் தொடர்ந்து மிரட்டும் குசால் மெண்டிஸ் 245 ஓட்டங்களுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 51 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி 629 ஓட்டங்கள் எடுத்துள்ளதால், 137 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது.
Image: Getty Images