அவுஸ்திரேலியாவை அலறவிட்ட இலங்கை வீரர்கள்! கொழும்பில் அரைசதம் விளாசல்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கையின் மதுஷ்கா, குசால் மெண்டிஸ் அரைசதம் அடித்தனர்.
கொழும்பில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி பதும் நிசங்கா, நிஷான் மதுஷ்கா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
நிசங்கா 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹார்டி ஓவரில் போல்டானார். அடுத்த வந்த குசால் மெண்டிஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நிதானமாக ஆடி அரைசதம் அடித்த மதுஷ்கா 70 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பவுண்டரிகளை விரட்டிய குசால் மெண்டிஸ் (Kusal Mendis) 34வது ஒருநாள் அரைசதம் விளாசினார்.
இலங்கை அணி 27 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |