59 பந்தில் சதம் விளாசிய குசால் மெண்டிஸ்! உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இலங்கை ருத்ர தாண்டவம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி வீரர் குசால் மெண்டிஸ் அதிரடி சதம் விளாசினார்.
குசால் மெண்டிஸ் சரவெடி ஆட்டம்
கவுகாத்தியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இலங்கை களமிறங்கி துடுப்பாடி வருகிறது.
? A hundred off just 59 balls from Kusal Mendis! ?#SLvAFG #LankanLions #CWC23 pic.twitter.com/54OS44B9kn
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 3, 2023
அதிரடி சதம்
திமுத் கருணாரத்னே 8 ஓட்டங்களிலும், நிசங்கா 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசிய அவர் 59 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார். மெண்டிஸின் மிரட்டலான ஆட்டத்தினால் இலங்கை அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
150 off 84 balls for Kusal Mendis! ?#LankanLions #CWC23 #SLvAFG pic.twitter.com/kbdBGIp2v0
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 3, 2023
குசால் மெண்டிஸ் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 84 பந்துகளில் 150 ஓட்டங்கள் எடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |