ஒரே இன்னிங்ஸ் அதிக ஸ்கோர் எடுத்த வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர் முதலிடம்!
2023ஆம் ஆண்டு டெஸ்டில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் குசால் மெண்டிஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி 2023ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர், அதிக விக்கெட்டுகள் என டாப் 10 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 1,210 ஓட்டங்கள் (13 போட்டிகள்) முதலிடம் பிடித்துள்ளார்.
இதில் ஸ்டீவன் ஸ்மித் (929), டிராவிஸ் ஹெட் (919), மார்னஸ் லபுசாக்னே (803), ஜோ ரூட் (787) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
அதேபோல் தனிநபர் அதிகபட்ச ஸ் கோரில் இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் (245 ஓட்டங்கள்) முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் கேன் வில்லியம்சன் (215), சவூத் ஷகீல் (208) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
அதிக ஸ்கோர் எடுத்த வீரர்கள்
- குசால் மெண்டிஸ் (இலங்கை) - 245 (291)
- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 215 (296)
- சவூத் ஷகீல் (பாகிஸ்தான்) - 208 (361)
- தகெனரின் சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்) - 207 (467)
- நிஷான் மதுஷ்கா (இலங்கை) - 205 (339)
- ஓலி போப் (இங்கிலாந்து) - 205 (208)
Twitter/ICC
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |