கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பை தாக்கிய பந்து! மிரண்டுபோய் நின்ற இலங்கை வீரரின் வீடியோ
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் யாசிர் ஷாவின் பந்துவீச்சில் இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் ஆட்டமிழந்த வீடியோ வைரலாகியுள்ளது.
காலேவில் நடந்து வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை துடுப்பாட்ட வீரர் குசால் மெண்டிஸ் 126 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் விளாசினார்.
அவர் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷாவின் பந்துவீச்சில் போல்டானார். 56வது ஓவரின் முதல் பந்தை குசால் மெண்டிஸ் எதிர்கொண்டபோது, யாசிரின் மாயாஜால சுழலால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பை தாக்கியது.
Ball of the Century candidate❓
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 18, 2022
Yasir Shah stunned Kusal Mendis with a stunning delivery which reminded the viewers of Shane Warne’s ‘Ball of the Century’.#SLvPAK pic.twitter.com/uMPcua7M5E
இதனால் மிரண்டுபோன மெண்டிஸ் ஏமாற்றத்துடன் வெளியேறினார். அந்த இன்னிங்சில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவரது பந்துவீச்சு ஷேன் வார்னேவை போல் உள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு, குசால் மெண்டிஸ் ஆட்டமிழந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
image from google