அசுரவேக ஆட்டத்தினால் உலகக்கோப்பையில் முதலிடம் பிடித்த இலங்கை வீரர்!
2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரெட் கொண்ட வீரர்கள் பட்டியலில் குசால் மெண்டிஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியில் இருந்தும் குறைந்தபட்சம் ஒரு வீரராக மிரட்டலான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இலங்கை அணியைப் பொறுத்தவரை விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் அணியின் தூணாக விளங்கி வருகிறார். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 122 (77) ஓட்டங்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 76 (42) என மொத்தம் 218 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
AP
இதில் அவரது ஸ்ட்ரைக் ரெட் 146.30 ஆகும். இதன்மூலம் நடப்பு தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரெட் கொண்ட வீரர்கள் பட்டியலில் குசால் முதலிடம் பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் மார்க்ரம் (141.37) மற்றும் கிளாசென் (139.43), இந்தியாவின் ரோகித் சர்மா (137.30), அவுஸ்திரேலியாவின் டெர்ல் மிட்செல் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Twitter (@ICC)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |