நாங்கள் ஒரு சிறிய தவறு செய்துவிட்டோம்: பாகிஸ்தானிடம் தோல்வி குறித்து பேசிய குசல் மெண்டிஸ்
Kusal mendis address reason of lost vs pakistan: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்ததன் காரணங்களை குசல் மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஒரு சிறிய தவறு செய்துவிட்டோம் என, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.
குசல் மெண்டிஸ்
ராவல்பிண்டியில் நடந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது.
இப்போட்டியில் இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ் (Kusal Mendis) 34 பந்துகளில் 18 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
தோல்விக்கு பின் பேசிய குசல் மெண்டிஸ், "பவர்-பிளே ஓவர்களில் நாங்கள் இன்னும் சற்று ஆக்ரோஷமாக விளையாடியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாகிஸ்தான் வீரர்கள் மிக சிறப்பாக துடுப்பாட்டம் செய்தனர்.
அந்த ஸ்கோர் போதுமானதாகவே இருந்தது. கடைசி 10 ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசினர். எங்கள் பந்துவீச்சுப் படை சிறப்பாக செயல்பட்டது. என்னைப் பொறுத்தவரை பவர்-பிளே ஓவர்களில் நான் சில பந்துகளை வீணடித்துவிட்டேன்.

அதனால்தான் அந்த கட்டத்தில் நாங்கள் சற்று சிரமப்பட்டோம். சில வீரர்கள் ஓட்டங்கள் எடுக்கத் தவறிவிட்டனர். மேலும் 40வது ஓவருக்குப் பிறகு நாங்கள் ஒரு சிறிய தவறு செய்துவிட்டோம். இருப்பினும் இதிலிருந்து சில படங்களைக் கற்றுக்கொண்டு அடுத்த போட்டிக்குத் தயாராக வேண்டும்" என்றார்.
