325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம்
Kusal mendis said we have to score more 25 or 30 runs: கூடுதலாக 25-30 ஓட்டங்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில், கூடுதலாக 25-30 ஓட்டங்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.
இறுதிப்போட்டி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் இறுதிப்போட்டி லாகூரில் நடந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ஓட்டங்கள் குவித்தது.
கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) 131 ஓட்டங்களும், பவன் ரத்நாயக்க 77 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று, முத்தரப்பு தொடரை வென்றது.
ஃபக்ஹர் ஜமான் (Fakhar Zaman) 99 பந்துகளில் 127 ஓட்டங்களும் (6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்), சாத் பெய்க் 74 ஓட்டங்களும், அராஃபத் மின்ஹாஸ் 61 (31) ஓட்டங்களும் விளாசினர்.

குசல் மெண்டிஸ்
தோல்வி குறித்து பேசிய இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ், "நாங்கள் முதல் சில ஓவர்களில் மிக சிறப்பாக விளையாடினோம். மதுஷங்க பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். கமிந்து துடுப்பாட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார். அவர்களின் ஆட்டத்தை நான் ரசித்தேன்.
இருப்பினும், நாங்கள் இன்னும் கூடுதலாக 25-30 ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும். உண்மையை சொல்லப்போனால் 5வது பந்துவீச்சாளர் இல்லாத சூழலில் பந்துவீசுவது சற்று கடினமாக இருந்தது.
ஏனெனில் பனிப்பொழிவு இருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகள சூழல் துடுப்பாட்டத்திற்கு சாதமாக மாறியதாலும் இது சவாலாக அமைந்தது" என்றார்.

