அவுஸ்திரேலியாவுடன் மோதவிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரிய இழப்பு!
அவுஸ்திரேலியாவுடன் மோதவிருக்கும் இலங்கை டி20 அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிப்ரவரி 11ம் திகதி சிட்னி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், குசால் மெண்டிஸ் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றுள்ள குசால் மெண்டிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 07, திங்கட்கிழமை நடத்தப்பட்ட வழக்கமான ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் (RAT) மெண்டிஸுக்கு தொற்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மெண்டிஸ் தற்போது கொரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டுள்ளார் மற்றும் திங்கட்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பிப்ரவரி 11ம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ள நிலையில், மெண்டிஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது இலங்கை அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.