PSL போட்டியில் மிரட்டிய இலங்கை வீரர்: வாணவேடிக்கை காட்டிய மேக்ஸ்வெல்..244 ரன் குவிப்பு
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இலங்கையின் குசல் பெரேரா 50 ஓட்டங்கள் விளாசினார்.
குசல் பெரேரா
கராச்சியில் ராவல்பிண்டிஸ் மற்றும் ஐதராபாத் கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய ஐதராபாத் அணியில் கேப்டன் லபுசாக்னே 5 ஓட்டங்களில் வெளியேற, மாஸ் சதாகத் 11 பந்துகளில் 28 ஓட்டங்கள் விளாசினார்.
அதன் பின்னர் சைம் அயூப் (12) வெளியேற உஸ்மான் கான் மற்றும் குசல் பெரேரா (இலங்கை) இருவரும் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினர்.
மேக்ஸ்வெல்
அரைசதம் அடித்த உஸ்மான் கான் (Usman Khan) 26 பந்துகளில் 54 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) விளாசி மசூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து க்ளென் மேக்ஸ்வெல், பெரேரா கூட்டணி வாணவேடிக்கை காட்டியது.
ருத்ரதாண்டவமாடிய மேக்ஸ்வெல் (Maxwell) 37 பந்துகளில் 70 ஓட்டங்கள் விளாசினார். இறுதிவரை களத்தில் நின்ற குசல் பெரேரா 30 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் ஐதராபாத் கிங்ஸ்மென் அணி 244 ஓட்டங்கள் குவித்தது. சாத் மசூட் 2 விக்கெட்களும், ஆசிப் அப்ரிடி, பென் சியர்ஸ், அமத் பட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |