நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்மழை! தெறிக்கவிட்ட இலங்கை வீரர்..MI எமிரேட்ஸ் அபார ஆட்டம்
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குசல் பெரேரா, நிக்கோலஸ் பூரன் அரைசதம் விளாசினர்.
அபு தாபியில் நடந்து வரும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் MI எமிரேட்ஸ் அணி 186 ஓட்டங்கள் குவித்தது.
குசல் பெரேரா ருத்ரதாண்டவம்
டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் MI எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்டர்நேஷனல் லீக் டி20 அபு தாபியில் நடந்து வருகிறது.
What a way to bring up 5️⃣0️⃣! Thunderous hit over the ropes and Kusal Perera brings up yet another half ton! 💪💥 #DPWorldILT20 #DVvMIE #AllInForCricket #WhereTheWorldPlays https://t.co/KnI6EUQZl2
— International League T20 (@ILT20Official) November 28, 2026
நாணய சுழற்சியில் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் MI எமிரேட்ஸ் அணி துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.
முகமது வஸீம் 6 ஓட்டங்களில் டேவிட் பெய்ன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் நிதான ஆட்டத்தை கடைபிடிக்க, தொடக்க வீரரான இலங்கையின் குசல் பெரேரா (Kusal Perera) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
நிக்கோலஸ் பூரன் வாணவேடிக்கை
அரைசதம் விளாசிய அவர் டாம் கர்ரன் பந்துவீச்சில் ஷதாப் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். குசல் பெரேரா 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் விளாசினார்.
Nicholas Pooran is switched 🔛 Consecutive 6️⃣s and the main man has upped the ante! 📈 #DPWorldILT20 #DVvMIE #AllInForCricket #WhereTheWorldPlays https://t.co/RqzUBVHhNz
— International League T20 (@ILT20Official) November 28, 2026
ஆரம்பத்தில் தடுமாறிய நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) ஒரு கட்டத்திற்கு மேல் வாணவேடிக்கை காட்டினார். அவர் சிக்ஸர்மழையில் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
20 ஓவர்களில் MI எமிரேட்ஸ் அணி 186 ஓட்டங்கள் குவித்தது. நிக்கோலஸ் பூரன் 57 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் விளாசி களத்தில் நின்றார். டேவிட் பெய்ன், டாம் கர்ரன், ஷதாப் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
