அந்த இலங்கை வீரருக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி விளையாடுகிறார்? பயிற்சியாளர் விளக்கம்
இலங்கை அணியின் துவக்க வீரரான குசல் பெரேரா குறித்து கேள்விக்கு பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில், இலங்கை, அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. ஆனால், இலங்கை அணியின் துவக்க வீரரான குசல்பெரேராவிடம் இருந்து இன்னும் எந்த ஒரு அதிரடி ஆட்டமும் வரவில்லை.
இதற்கு அவருக்கு முன்பு இருந்த காயம் காரணமா என்று கேட்ட போது, இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் கூறுகையில், இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு குசல் பெரேரா அந்தளவிற்கு பெரிய கிரிக்கெட் விளையாடவில்லை.
ஏனெனில், அவர் காயத்தில் இருந்தார். அவர் தற்போது 100 சதவீதம் விளையாடுகிறார் என்று கூறுவது தவறு. தற்போதைக்கு அவர் காயத்தில் இருந்து மீண்டாலும், ஒரு முன்னெச்சரிக்கை ஆட்டத்தையே(கட்டுப்படுத்தப்பட்ட) வெளிப்படுத்தி வருகிறார்.
அவர் எங்களின் மேட்ச் வின்னர், நிச்சயமாக அவருக்கு 100 சதவீதம் ஆதரவளிப்பேன். அவரிடம் ஒரு வெற்றிக்கான ஆட்டம் உள்ளது. அது எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.