டி20யில் வரலாற்று படைத்த இலங்கை வீரர்! தில்ஷனின் சாதனை தகர்ப்பு
நியூசிலாந்து எதிரான டி20 போட்டியில் இலங்கை வீரர் குசால் பெரேரா சாதனை படைத்தார்.
இலங்கை வெற்றி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தம்புள்ளையில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவரில் 135 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. வெல்லாலகே 3 விக்கெட்டுகளும், துஷாரா, ஹசரங்கா மற்றும் பத்திரனா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் டக்அவுட் ஆனார். அதன் பின்னர் பதும் நிசங்கா 19 ஓட்டங்களிலும், குசால் பெரேரா 23 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
கமிந்து மெண்டிஸ் 23 (16) ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைர் சரித் அசலங்கா ஆட்டமிழக்காமல் 35 (28) ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
குசால் பெரேரா சாதனை
இப்போட்டியில் குசால் பெரேரா (Kusal Perera) 23 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர் எனும் வரலாற்று சாதனையை படைத்தார்.
முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷன் 1889 (80) ஓட்டங்கள் எடுத்த நிலையில், குசால் பெரேரா 1904 (73) ஓட்டங்கள் எடுத்து முறியடித்துள்ளார்.
குசால் மெண்டிஸ் (1840), பதும் நிசங்கா (1541), மஹேலா ஜெயவர்த்தனே (1493) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |