இப்படி கேட்ச் விட்டா ஒன்னும் பண்ண முடியாது! இலங்கை தோல்விக்கு இதுவும் காரணமா? வைரலாகும் வீடியோ
ஆஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில், இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா கேட்ச் விட்ட வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12-ன் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின் ஆடிய ஆஸ்திரேலியா அணி 17 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 42 பந்தில் 65 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
அதே சமயம் வார்னரை 4.3 ஓவரிலே 18 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆக வேண்டியது. ஆனால் கைக்கு வந்த கேட்சை விக்கெட் கீப்பரான குசால் பெரேரா விட்டுவிட்டார். இதைக் கண்ட பந்து வீச்சாளர் Chameera மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.
ஒருவேளை அந்த கேட்சை பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம், இதுவும் இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகின்றனர்.