தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து இலங்கை நட்சத்திர வீரர் விலகல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து இலங்கை நட்சத்திர துடுப்பாட்டாகரர் குசால் பெரேரா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம், காயத்திலிருந்து மீண்ட குசால் பெரேரா தனது பயிற்சியை தொடங்க பிசிஆர் சோதனை மேற்கொண்டார்.
அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில், தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் குசால் பெரேரா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி செப்டம்பர் 2ம் திகதி கொழும்பு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
இதனிடையே, தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கான 29 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் துணை ஊழியர்களுக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டது.
சோதனை முடிவில் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளது.