தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இலங்கை நட்சத்திர வீரர் விளையாடுவதில் சிக்கல்! என்ன காரணம்? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கை துடுப்பாட்டகாரர் குசால் பெரேராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கு ஏற்பட்டிருந்து காயங்களிலிருந்து குசால் பெரேரா மீண்ட நிலையில், அவர் தனது பயிற்சியை தொடங்க நேற்று பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதை பரிசோதனை முடிவுகள் உறுதி செய்தது.
இதன் காரணமாக அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் தென் ஆப்பிரிக்கா உடனான ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கான இலங்கை அணியில் குசால் பெரேரா இடம்பெற வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி செப்டம்பர் 2ம் திகதி கொழும்பு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமான நடைபெறவுள்ளது.