44 பந்தில் சிக்ஸர் அடித்து இலங்கை வீரர் முதல் சதம்! சிக்ஸர்மழையால் கதிகலங்கிய நியூசிலாந்து அணி
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை வீரர் குசால் பெரேரா அதிரடி சதம் விளாசினார்.
சுக்குநூறாக நொறுக்கிய குசால் பெரேரா
Saxton oval மைதானத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்ய, இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.
பதும் நிசங்கா 14 ஓட்டங்களிலும், குசால் மெண்டிஸ் 22 (16) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் வந்த குசால் பெரேரா (Kusal Perera) எதிரணி பந்துவீச்சாளர்களின் ஓவர்களை சுக்குநூறாக நொறுக்கினார்.
மறுமுனையில் அணித்தலைவர் சரித் அசலங்கா (Charith Asalanka) சிக்ஸர் மழை பொழிந்தார். இதன்மூலம் இலங்கையின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
அசலங்கா சிக்ஸர்மழை
பெரேரா தான் சந்தித்த 44வது பந்தில் சிக்ஸர் விளாசி சதம் அடித்தார். இது அவரது முதல் சர்வதேச டி20 சதம் ஆகும்.
அசலங்கா 24 பந்துகளில் 5 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து 46 பந்துகளை எதிர்கொண்ட குசால் பெரேரா 4 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்கள் குவித்தது. ஹென்றி, டுஃப்பி, சான்ட்னர், போக்ஸ் மற்றும் மிட்செல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |