சரவெடி காட்டிய இலங்கையின் குசல் பெரேரா: MI எமிரேட்ஸ் அதிரடி வெற்றி
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் MI எமிரேட்ஸ் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
MI எமிரேட்ஸ் அணி இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டியில், டெஸர்ட் வைப்பர்ஸ் அணியை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
குசல் பெரேரா
டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் MI எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டி துபாயில் நடந்தது.
முதலில் ஆடிய MI எமிரேட்ஸ் அணியில் முகமது வஸீம், குசல் பெரேரா கூட்டணி 56 பந்துகளில் 94 ஓட்டங்கள் குவித்தது. 30 பந்துகளில் 41 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் வஸீம் ஆட்டமிழந்தார்.
அரைசதம் அடித்த குசல் பெரேரா (Kusal Perera) 40 பந்துகளில் 58 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.

சுருண்ட டெஸர்ட் வைப்பர்ஸ்
அடுத்து ரூதர்போர்டு 5 ஓட்டங்களில் வெளியேற, அதிரடியாக 19 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாசி நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழந்தார்.
MI எமிரேட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் குவித்தது. நஸீம் ஷா, குஸைமா தன்வீர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 122 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜோ கிளார்க் 35 ஓட்டங்கள் எடுத்தார். கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளும், ஜஹூர் கான் 3 விக்கெட்டுகளும், மோட்டி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
