இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இலங்கை நட்சத்திர வீரர்கள் விலக வாய்ப்பு!
இலங்கை நட்சத்திர வீரர்களான மகேஷ் தீக்ஷனா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காயம் காரணமாக இருவரும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பிப்ரவரி 24ம் திகதி லக்னோ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இலங்கை கேப்டன் சானக்க, வனிந்து ஹசரங்க தற்போது மெல்போர்னில் PCR பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் வனிந்து ஹசரங்க விளையாடினால் அது இலங்கை அணிக்கு பெரும் பலமாக அமையும்.
மேலும், குசால் மெண்டிஸ் மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகிய இரு வீரர்களுக்கும் MRI ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
MRI ஸ்கேன் முடிவுகளின் அடிப்படையில் வீரர்கள் விளையாடுவார்களா என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று கேப்டன் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.