உலகக்கோப்பையில் இலங்கை ஹாட்ரிக் தோல்வி! விரக்தியில் பேசிய கேப்டன் குசால் மெண்டிஸ்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பெரியளவில் ஸ்கோர் குவிக்காததால் தோல்வியை தழுவியதாக இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் கூறியுள்ளார்.
இலங்கை ஹாட்ரிக் தோல்வி
லக்னோவில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.
Twitter (@Sportskeeda)
இது இலங்கை அணி உலகக்கோப்பையில் சந்தித்த தொடர்ச்சியான 3வது தோல்வி ஆகும்.
தசுன் ஷானகா காயம் காரணமாக வெளியேறிய நிலையில், குசால் மெண்டிஸ் தலைமையிலும் இலங்கை தோல்வி அடைந்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குசால் மெண்டிஸ்
தோல்வி குறித்து பேசிய இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் கூறுகையில், 'நாங்கள் 2 ஆட்டங்களில் நன்றாக துடுப்பாடினோம். இன்று (நேற்று), நாங்கள் அவ்வாறு செயல்பட சிரமப்பட்டோம். அடுத்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன். சிறந்த மட்டத்தில் துடுப்பாடிய பெரேரா, நிசங்காவுக்கு பெருமை போய் சேர வேண்டும்.
ஆனால், நடுவரிசை மற்றும் கீழ் வரிசையில் பேட்டர்கள் பங்களிக்கவில்லை, ஒருவேளை 280-290 ஓட்டங்கள் இந்த விக்கெட்டில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எங்களிடம் இன்னும் 6 ஆட்டங்கள் உள்ளன. எனது பேட்டிங் குழு மீது நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
Twitter (@Sportskeeda)
மேலும் அவர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மதுஷன்காவை வெகுவாக பாராட்டினார் குசால் மெண்டிஸ்.
UNI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |