அமெரிக்க அணியை சம்பவம் செய்த குஷால்! 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நேபாளம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அமெரிக்க அணி ஆல்அவுட்
நேபாளம் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கிர்திபூரில் நடந்தது.
முதலில் துடுப்பாடிய அமெரிக்க அணி, 43.3 ஓவர்களில் 195 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஸ்மித் பட்டேல் 83 ஓட்டங்களும், ஷெஹான் ஜெயசூரியா 50 ஓட்டங்களும் எடுத்தனர். திபேந்திர சிங் ஐரி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய நேபாள அணியில் ஆசிஃப் ஷேய்க் 72 பந்துகளில் 58 ஓட்டங்கள் (8 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார்.
குஷால் புர்டெல் சதம்
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குஷால் புர்டெல் (Kushal Bhurtel) சதம் விளாசினார்.
நேபாள அணி 36.4 ஓவர்களிலேயே 199 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இறுதிவரை களத்தில் நின்ற குஷால் புர்டெல் 118 பந்துகளில் 120 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |