கொடிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ! மருத்துவமனையில் அனுமதி..வேகமாக பரவும் தொற்று
பிரபல நடிகை குஷ்பூ அடினோவைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் குஷ்பூ
ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பூ அடினோவைரஸ் எனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உடல் பலவீனமாக உள்ள அவர், காய்ச்சலால் பாதிக்கப்படும் உடல்நிலையை அலட்சியப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சரியான நேரத்தில் சரியான மருந்து தேவை என எச்சரித்துள்ள குஷ்பூ தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அடினோவைரஸ்
இந்த வைரஸ் மனித மூளை அமைப்பு, குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரலின் சுவர்களை பாதிக்கும். இது மிகவும் விரைவாக பரவும் சுவாச வைரஸ் ஆகும்.
இது சளி முதல் தீவிரமான சுவாச நிலைகள் வரை பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். இந்த வைரஸ் தோலில் இருந்து தோலுடன் தொடர்பு கொள்வதன் மூலமும், காற்று மற்றும் நீர் மூலமாகவும், இருமல் மற்றும் தும்மல் மூலமாவும் பாதிக்கப்பட்ட நபரின் மலம் மூலமாகவும் பரவும்.
பொதுவான அறிகுறிகள்
- சாதாரண சளி
- காய்ச்சல்
- தொண்டை வலி
- கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி அல்லது மார்பு குளிர்
- நிமோனியா அல்லது நுரையீரல் தொற்று
- பிங்க் கண்
- கடுமையான இரைப்பை குடல் அழற்சி அல்லது வயிற்று வலி
எப்படி தவிர்ப்பது?
- வலி நிவாரணி மருந்துகள் மற்றும் அறிகுறிகளை சமாளிக்க மருந்துகளை வாங்கலாம்
- உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிர்க்க வேண்டும்
- உங்கள் கைகளையும், சுற்றியுள்ள பகுதியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
- ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்