வால் எலும்பில் வலி... அவதிப்படும் குஷ்பு! மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
பிரபல நடிகையும், பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வால் எலும்பில் ஏற்பட்ட வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை குஷ்பு கடந்த 2 ஆண்டுகளாகவே இடுப்பு பகுதியில் உள்ள வால் எலும்பில் ஏற்படும் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
உடல் எடையை குறைத்த பின்னரும் எலும்பு பகுதியில் வலி தொடர்ந்து கொண்டிருக்கிறது, இதற்காக கடந்த ஓராண்டுக்கு முன் அறுவைசிகிச்சையும் நடந்து முடிந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வலியால் அவதிப்பட்டு வந்த குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ள குஷ்பு, விரைவில் பூரண நலம்பெற்று மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலரும் குஷ்புக்கு ஆறுதலான கருத்துகளை பதிவிட்டு வருகிறார், இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
On the road to recovery! Underwent a procedure for my coccyx bone ( tail bone ) yet again. Hope it heals completely. ? pic.twitter.com/07GlQxobOI
— KhushbuSundar (@khushsundar) June 23, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |