கால்பந்து போல தூக்கி வீசி பெண்களை கேவலப்படுத்த வேண்டாம்.., குஷ்பு ஆவேசம்
அண்ணா பல்கலை கழக மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
குஷ்பு பேட்டி
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல் வெளியில் விடப்பட்டுள்ளது. இதனை யார் கொடுத்தது? நிர்பயா வழக்கில் கூட பல நாட்கள் கழித்து தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியே வந்தது. அப்படி இருக்கையில் இந்த தகவல்கள் எப்படி வெளியே வந்தது?
பாஜக, அதிமுக, திமுக கட்சி என எல்லாமே கலந்து நீங்கள் சண்டை போட்டுக் கொண்டு இதனை அரசியலாக மாற்றாதீர்கள்.
பெண்களுக்கு பிரச்சனை நடக்கும் போது கால்பந்து போல அங்கேயும் இங்கேயும் தூக்கி வீசி பெண்களை கேவலப்படுத்த வேண்டாம்.
கனிமொழி எங்கே? திமுகவிற்கும் மகளிர் அணி இருக்கிறதே. அது எங்கே? நாளைக்கு எங்களை கைது செய்தாலும் பரவாயில்லை. பேரணிக்கு செல்வோம். உங்கள் சார்பாக யார் குரல் கொடுத்தார்கள்?
யாராவது திமுகவில் இருந்து அமைச்சராவது, எம்பியாவது, எம்.எல்.ஏவாது குரல் கொடுத்தார்களா? ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்?" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |