முடி முதல் அடி வரை என் அழகின் ரகசியம் இதுதான்- நடிகை குஷ்பு கூறிய சீக்ரெட்
குஷ்பு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர்.
தமிழ் தெரியாமல், வந்து சினிமாவில் தான் நடித்த சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமானவர். இந்தப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியடைந்தது.
சினிமாவை தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C யை திருமணம் செய்துகொண்டார். தற்போது அரசியல், பொது வாழ்க்கை போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அழகின் ரகசியம்
குஷ்பு தனது சின்ன வயதிலிருந்து அழகை பராமரிப்பதற்கு கடலை மாவு, மஞ்சள் தூள், பாலை பேஸ்பேக்காக பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.இதுதான் அவரின் முகப்பொலிவிற்கு காரணம்.
தனது தலைமுடியை பராமரிப்பதற்கு அரிசிமாவு மற்றும் பீட்ரூட் கலந்த பேக்கை பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் குஷ்பு உடல் எடை குறைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். தனது குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் எடையை குறைக்க நினைத்து அதனை பின்பற்றுகிறோம் என்று குஷ்பு கூறியுள்ளார்.
உடல் எடையை குறைக்க தினமும் அதிகாலையில் 4 கிமீ தூரம் நடைப்பயிற்சி செய்வேன். பின் வீட்டின் தோட்டத்தில் சூரிய நமஸ்காரம் பத்து முறை செய்வேன்.
பின் மாலை நேரத்தில் ஜிம்மிற்கு செல்வேன்.இதுதான் என் உடல் எடையை குறைக்க காரணம் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |