எனக்கு தமிழ் தெரியாது, 'சேரி' என்றால் என்ன நீங்கள் சொல்லுங்க - ஊடகத்தினரை கேள்வி கேட்ட குஷ்பு
ஊடகத்தினரை சந்தித்த நடிகை குஷ்பு, 'சேரி' என்றால் என்ன என்று விளக்கம் கொடுங்கள் என கேள்வி எழுப்பினார்.
'சேரி மொழி' சர்ச்சை
திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்தபோது, 'சேரி மொழி' என நடிகை குஷ்பு குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, ''பிரெஞ்சு மொழியில் சேரி என்பதற்கு அன்பு என்று அர்த்தம். அதனால் தான் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். பட்டியலின மக்களை குறிப்பிடவில்லை'' என்று குஷ்பு விளக்கம் அளித்தார்.
"டெலிவரியில் கணவரும் இருக்கணுமா?" மருத்துவமனை விளம்பரத்தால் கர்ப்பிணி மரணம்: சென்னையில் நடந்த பயங்கரம்
இந்த நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு மீண்டும் இவ்விகாரம் குறித்து விளக்கத்தை அளித்தார்.
விளக்கம் கொடுங்கள்
அப்போது அவர், 'சேரி என்பது அரசு பதிவுகளில் இருக்கும். வேளச்சேரி, செம்மஞ்சேரி என ஊர்களின் பெயர் உள்ளது. அதற்கு என்ன அர்த்தம்?
நீங்கள் எல்லாரும் தமிழ் தெரிஞ்சவங்க தானே சேரி என்பதற்கு என்ன அர்த்தம்னு விளக்கம் கொடுங்க' என்றார்.
அதற்கு செய்தியாளர்கள் இன்றைய நடைமுறையில் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களை அப்படி கூறுகிறார்கள், அது தவறு என்றனர்.
பின்னர் தொடர்ந்து பேசிய குஷ்பு, 'நான் அந்த அர்த்தத்தில் சொல்லல. எந்த பகுதியில் வாழும் மக்களுக்கும் நமக்கு சமமாக உட்கார்ந்து வாழும் உரிமை இருக்கு.
குறிப்பிட்ட மக்கள் தாழ்த்தும் அர்த்தத்தில் நான் பேசவில்லை. நான் தமிழ்நாட்டுக்கு வந்ததில் இருந்து தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை.
பிரெஞ்சில் அன்பு என்பதன் அர்த்தத்தில் தான் நான் சேரி என்று கூறினேன்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |