நடிகை குஷ்பூவிடம் ரகிகர் கேட்ட அந்த கேள்வி! சிரித்து கொண்டே என்ன சொன்னார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்
நடிகை குஷ்பூவிடம் அவரது ரசிகர்கள் 2வது முறையாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் 90'ஸ்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. இவரது ரசிகர்கள் இவரின் மேல் உள்ள அளவுகடந்த பாசத்தால் சாப்பிடும் இட்லிக்கு குஷ்பூ இட்லி என்று பெயர் வைத்தனர். சிலர் இவருக்காக கோவில் கட்டி வழிபட்டவர்களும் உள்ளனர்.
இத்தகைய புகழ் பெற்ற நடிகை திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார். பல ஆண்டுகள் கழித்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கோகுலத்தில் சீதை சீரியலில் என்டரி கொடுத்தார்.
Oh oh.. sorry you are late. A little over 21 yrs late to be precise. But let me check with my husband anyways. ?????? https://t.co/Naf3ixoaF8
— KhushbuSundar (@khushsundar) August 22, 2021
இந்நிலையில் அவர் எடை குறைத்து 20வயது இளம்பெண் போல் மாறிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதையடுத்து அவரது ரசிகர்களில் ஒருவர் ட்விட்டரில் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் மேடம் என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த குஷ்பூ மன்னிக்கவும்.. நீங்கள் 21 ஆண்டுகள் தாமதமாக்கிவிட்டீர்கள். ஆனால் நான் எனது கணவரிடம் கேட்டு சொல்கிறேன் என்று கூறயிருந்தார். அப்போதும் குஷ்பூவை விடாமல் அந்த ரசிகர் உங்கள் கணவர் பதில் அளித்தாரா என்று கேட்டுள்ளார்.
Unfortunately I am his only wife.. so he says sorry. Not ready to give up. ?????? https://t.co/8oSNbI7oPL
— KhushbuSundar (@khushsundar) August 22, 2021
அதற்கு குஷ்பூ நான் அவருடைய ஒரே மனைவி.. அதனால் அவர் விட்டுக்கொடுக்க தயராக இல்லை என்று குஷ்பூ பதிவிட்டுள்ளார்.