அது தனிப்பட்ட விஷயம்.. யாரும் தலையிட வேண்டாம்! சமந்தா விவாகரத்து குறித்து அதிரடி கருத்து பதிவு செய்த நடிகை குஷ்பு
நடிகை சமந்தா விவாகரத்து குறித்து நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்ய போவதாக கடந்த சில மாதங்களாக இணையத்தில் செய்திகள் தீயாய் பரவி வந்தன.
ஆனால் இதுகுறித்து இருவரும் மெளனம் காத்து வந்த நிலையில் நேற்று விவாகரத்து செய்ய போவதாக இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.
இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டதால் இருவருக்கு இடையில் என்ன நடந்தது குறித்து ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அவர்கள் இருவரும் பிரிந்ததற்கான உண்மையான காரணம் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
ஒரு ஜோடிக்கு இடையே என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள். அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதில் தலையிட நமக்கு எந்த உரிமையும் இல்லை.
அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு அவர்கள் எடுத்த முடிவுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்டு கொண்டுள்ளார்.