நடிகை குஷ்பூவின் பொலிவான சருமத்திற்கு உதவும் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
90களில் தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பூ.
54 வயதாகும் குஷ்பூவின் முகத்தில் வயதிற்கு ஏற்ற முதிர்ச்சி இல்லாமல் இன்றளவும் சருமத்தை பளபளவென வைத்துக்கொள்வதில் முக்கியத்துவம் அளிக்கிறார்.
இந்நிலையில், நடிகை குஷ்பூ தனது சமூக வலைதள பக்கத்தில் சில அழகு குறிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
முகத்திற்கு மசாஜ் செய்து வீடியோ போட்ட இவர், ஒரு எண்ணெயை தான் வீட்டிலேயே தயாரிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
குஷ்பூ கூறிய அந்த எண்ணெய்யை வீட்டில் எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆல்மண்ட் எண்ணெய்
- ஆலிவ் எண்ணெய்
- தேங்காய் எண்ணெய்
- வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
- கேரட்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு வாணலில் ஆல்மண்ட் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
பின் இதில் துருவைத்த கேரட் சேர்த்து 2 மணி நேரம் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
அடுத்து இதனை நன்கு ஆறவைத்து ஒரு பருத்தி துணியால் வடிகட்டி எடுத்துக்கொள்ளலாம்.
இதனை தினமும் குளிப்பதற்கு முன் முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்தால் முகத்தில் சுருக்கம் இல்லாமல் இளமையான தோற்றத்துடன் இருக்கும்.
குஷ்பூவின் அழகு ரகசியம்
குஷ்பூ, முகத்தை பொலிவுடன் வைத்திருக்க தயிர், மஞ்சள், தேன், கடலை மாவு மற்றும் குங்குமப்பூ போட்ட பாலை தேய்ப்பதாக கூறப்படுகிறது.
இதை பல சமயங்களில் அவர் இயற்கை ஸ்க்ரப் ஆகவும் உபயோகிக்கிறார். இதனால், இது சோப்பிற்கு நல்ல மாற்றாக உபயோகமாகிறதாம்.
முடியை பராமரிக்க குஷ்பூ, தயிர், தேன், முட்டை, தேங்காய் எண்ணெய், லாவண்டர் மற்றும் ரோஸ்மேரி சில சொட்டுக்கள் கலந்து உபயோகிக்கிறராம்.
அதேபோல, ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்த பின்பு, குஷ்பூ கண்டிப்பாக கண்டீஷனர் உபயோகிப்பாராம். இது, அவரது கூந்தலை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்துக்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |