கொரோனா தடுப்பூசிக்கும்... விவேக் மாரடைப்பிற்கும் தொடர்பிருக்கா? நடிகை குஷ்பு வெளியிட்ட விளக்கம்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த நாளே, நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அதற்கும் தடுப்பூசிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று நடிகை குஷ்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகரான விவேக், நேற்று கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோசை போட்டுக் கொண்டார். இதையடுத்து இன்று அதிகாலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படவே உடனடியாக அவர் வடபழனியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக்கிற்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாக கூறி சமூகவலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
Please do not link #Vivek getting vaccinated yesterday and having an attack today. It has nothing to do with each other. Let doctors do their duty. Please go and get vaccinated if you are eligible. Do not get swayed by rumours n self assumptions. #fightcovid #GetVaccinated
— KhushbuSundar ❤️ (@khushsundar) April 16, 2021
இதுகுறித்து நடிகையும் பாஜக வேட்பாளருமான குஷ்பு சுந்தர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நேற்றைய தினம் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதையும் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையும் தயவு செய்து தொடர்புப்படுத்தி பேசாதீர்கள்.
இரண்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மருத்துவர்கள் அவர்களது கடமையை செய்யட்டும். நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியுள்ளவர் எனில் தயவு செய்து மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக் கொள்ளுங்கள்.
நீங்களாக ஒன்றை நினைத்துக் கொண்டும் வதந்திகளாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.