பிரியாணி சுவையை மிஞ்சும் குஸ்கா.., இலகுவாக எப்படி செய்வது?
இந்த சுவையான குஸ்கா பிரியாணியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் குஸ்கா பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- பட்டை- 1
- ஏலக்காய்- 2
- கிராம்பு- 3
- பிரிஞ்சி இலை- 2
- வெங்காயம்- 2
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 2
- புதினா- 1 கைப்பிடி
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- கரம் மசாலா- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தயிர்- 2 ஸ்பூன்
- தக்காளி- 2
- சீரக சம்பா அரிசி- 1 கப்
செய்முறை
முதலில் சீரக சம்பா அரிசியை 2 மூதுரை நன்கு கழுவி ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து இதில் மிளகாய் தூள், பச்சை மிளகாய், புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
இதனைதொடர்ந்து இதில் கரம் மசாலா, உப்பு, தயிர் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.
இறுதியாக இதில் ஊறவைத்த அரிசி, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து 2 விசில் விட்டு இறக்கி நெய் சேர்த்து கலந்தால் குஸ்கா பிரியாணி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |