குவைத் தீ விபத்து: 2 வாரத்தில் சொந்த ஊர் திரும்ப இருந்த தமிழர் மரணம்
இரண்டு வாரங்களில் சொந்த ஊர் திரும்பும் நேரத்தில் இருந்த தமிழர் ஒருவர் குவைத் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 12 -ம் திகதி அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 5 தமிழர்கள் என்று கூறப்படுகிறது. குவைத் நாட்டவருக்கு சேர்ந்த இந்த குடியிருப்பில், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர்.
தமிழர் மரணம்
தமிழக மாவட்டமான கடலூர், காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சின்னதுரை (42) என்பவர் குவைத் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இ
வருக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சத்யா என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் கிடையாது. இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குவைத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், வேலையில் விடுவிக்கப்பட்டு சில மாதங்களுக்கே முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.
பின்னர், கம்பெனியில் இருந்து அழைப்பு வந்ததால் 6 மாதங்களுக்கு முன்பு குவைத்துக்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 2 வாரங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருவதாக இருந்துள்ளார்.
இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், "எனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக முதல்வரும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |