மாரடைப்பால் இறந்த கே.வி ஆனந்துக்கு ஏற்கனவே கொரோனா இருந்தது உறுதி! மனைவி, மகளுக்கும் கொரோனா.. முக்கிய தகவல்
மாரடைப்பால் மரணமடைந்த கே.வி ஆனந்துக்கு கொரோனா தொற்று இருப்பது இருந்த நிலையில் அவரின் உடல் உறவினர்களிடம் கொடுக்கப்படாமல் நேராக மருத்துவமனையில் இருந்து மின்மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், ஒளிப்பதிவாளர் என பன்முகத்தன்மையோடு விளங்கிய கே.வி ஆனந்த் இன்று அதிகாலை சென்னை மியாட் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று முதலில் செய்திகள் வந்தன.
பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட வில்லை.
Two weeks ago, Dir #KVAnand 's wife and his daughter tested positive for #Covid They isolated themselves at home and were getting treatment
— Ramesh Bala (@rameshlaus) April 30, 2021
Meantime, Dir #KVAnand also tested positive and felt breathlessness.. He was admitted in hospital and died of Cardiac arrest.. #RIPKVAnand
மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசண்ட் நகர் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
அதாவது இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆனந்தின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
அதே சமயத்தில் ஆனந்துக்கும் கொரோனா தொற்று உறுதியாகி மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட வில்லை. மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசண்ட் நகர் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.