முதல் பந்திலே ஜோ ரூட்டை அவுட்டாக்கியெ வெளியேற்றிய நியூசிலாந்து வீரர்! டிரான ஆன முதல் டெஸ்ட் போட்டி
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி இறுதிப் போட்டி இங்கிலாந்தில் தான் நடைபெறவுள்ளது.
வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த போட்டியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதனால் அதற்கு முன் நடக்கும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி, முக்கியமான கருதுகிறது.
அதன் படி இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 2-ஆம் திகதி லார்ட்சில் துவங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியில் துவக்க வீரர் டிவோன் கான்வே சிறப்பாக இரட்டை அடிக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 378 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிவோன் கான்வே 200 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியில் ஓலி ராபின்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் ராரி ஜோசப் பார்ன்சைத் தவிர மற்ற வீரர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இறுதியாக ராரி ஜோசப் பார்ன் 132 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 275 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் ஆட்டத்தின் நான்காம் நாளின் முதல் பந்திலே,42 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன ஜோ ரூட்டை நீயூசிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கெய்ல் ஜேமின்சன் அவுட்டாக்கினார்.
அதே போன்று மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுத்தி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் விழ்த்தினார். 103 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடிய நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
New Zealand strike with the first ball of the day.
— England Cricket (@englandcricket) June 5, 2021
Scorecard/Clips: https://t.co/7Bh6Sa3TPf#ENGvNZ pic.twitter.com/ccpdcSPKH5
முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த டென்வோ கான்வெ, இரண்டாவது இன்னிங்ஸில் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் 272 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி, ஐந்தாம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுக்க ஆட்டம் டிரா அனது.
இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 10-ஆம் திகதி நடைபெறவுள்ளது.