கோஹ்லியை சொன்னது போன்றே அவுட் ஆக்கிய காட்டிய நியூசிலாந்து வீரர்! கமெராவில் சிக்கிய காட்சி
இந்திய அணியின் தலைவரான கோஹ்லியை, நியூசிலாந்து வீரர் அவுட் ஆக்கி வெளியேற்றும் வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டி நேற்று முன் தினம் துவங்கியது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தாக, நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 146 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் இழப்புடன் விளையாடி வந்தது.
இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாடி வரும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக சிறப்பாக விளையாடி வந்த கோஹ்லியின் விக்கெட்டை ஜேமிசன் வீழ்த்தினார்.
Kyle Jamieson fifer. What a bowler! pic.twitter.com/u6H0F73Xwb
— Praveen (@ItsPra98) June 20, 2021
அதன் பின்னர் தான் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, ஆல் அவுட் ஆனது. இந்த போட்டி துவங்குவதற்கு முன்பு, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுத்தி, விராட் கோஹ்லிக்கு எதிராக நிச்சயம் ஜேமிசன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவரை ஆட்டமிழக்க வைப்பார் என்று தெரிவித்து இருந்தார்.
அவர் கூறியதைப் போன்றே தற்போது இன்றைய போட்டியில் கோஹ்லியை ஆட்டமிழக்க வைத்து பெவிலியனுக்கு அனுப்பியது மட்டுமின்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.