பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக எம்பாப்பே நியமனம்!
அடுத்த சர்வதேச போட்டிகளுக்கான பிரெஞ்சு தேசிய அணியின் புதிய கேப்டனாக கைலியன் எம்பாப்பே இருப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கோல் நாயகன்
24 வயதான கைலியன் எம்பாப்பே பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். கத்தார் நாட்டில் கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில், எம்பாப்பே 8 கோல்கள் அடித்து மிரட்டினார்.
@Soccrates Images/GettyImages
அதனைத் தொடர்ந்து பிரான்சின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் உயர்ந்தார். கிளப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி பல சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.
@GettyImages
கேப்டனாக எம்பாப்பே நியமனம்
இந்த நிலையில் PSGயில் விளையாடும் வீரராக, பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் 9வது கேப்டனாக கைலியன் எம்பாப்பே நியமிக்கப்பட்டுள்ளார்.
@Getty
PSG அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களில் பிரெஸ்னேல் கிம்பெம்பேவுக்கு பிறகு, பிரான்சின் கேப்டனான வீரர் எம்பாப்பே தான் என பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் கூறியுள்ளது.