85,000 ரசிகர்கள் முன்னிலையில்... சிலிர்த்துப் போன கைலியன் எம்பாப்பே
உலகின் மிகப் பிரபலமான கால்பந்து அணிகளில் ஒன்றான ரியல் மாட்ரிட் அணியில் பிரான்ஸ் நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியுடன்
சுமார் 85,000 தீவிர ரியல் மாட்ரிட் ரசிகர்கள் முன்னிலையில், அணி நிர்வாகிகளால் கைலியன் எம்பாப்பே அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ரியல் மாட்ரிட் அணியுடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை கடந்த மாதம் எம்பாப்பே இறுதி செய்துள்ளார்.
ஆண்டுக்கு 20 மில்லியன் டொலர் சம்பளமாக பெறவிருக்கிறார். இந்த 5 ஆண்டுகளில் எம்பாப்பே 325 மில்லியன் டொலர் சம்பாதிக்க உள்ளார். அத்துடன் ஒப்பந்தம் செய்ததற்கான ஊக்கத்தொகையாக 130 மில்லியன் டொலர் பெற்றுள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியின் தலைவரான Florentino Perez மேடையில் கைலியன் எம்பாப்பேவை வரவேற்றுள்ளார். ரியல் மாட்ரிட் அணியின் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவரான Zinedine Zidane இந்த அறிமுக விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்.
2009ல் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்த போது கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தது போன்று, கைலியன் எம்பாப்பே அவரது சட்டையில் உள்ள பேட்ஜை முத்தமிட்டார்.
29 ஆட்டங்களில் 27 கோல்கள்
ரியல் மாட்ரிட் அணியில் நீண்ட 9 ஆண்டுகள் செயல்பட்டு 438 ஆட்டங்களில் களமிறங்கிய ரொனால்டோ 450 கோல்களை பதிவு செய்திருந்தார். இந்த 9 ஆண்டுகளில் அவர் 5 முறை Ballon d’Ors விருது பெற்றார்.
ரியல் மாட்ரிட் அணி இருமுறை La Liga கிண்ணம் வென்றது. நான்கு முறை சேம்பியன்ஸ் லீக் கிண்ணம் வென்றது. PSG அணியில் கடந்த ஓராண்டில் 29 ஆட்டங்களில் களமிறங்கிய எம்பாப்பே 27 கோல்களை பதிவு செய்துள்ளார்.
சக வீரர்களுக்கு 7 முறை கோல் வாய்ப்பு உருவாக்கியுள்ளார். 40 முறை கோல் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |