வாரத்திற்கு 21 கோடி: எம்பாப்பேவை தக்கவைக்க PSG போராட்டம்
பிரான்சின் PSG அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், புதிதாக 1 பில்லியன் யூரோ தொகையை வழங்க PSG அணி நிர்வாகம் தயாரானதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ஒப்பந்தம்
அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த புதிய ஒப்பந்தம் நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் PSG அணி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு PSG அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், அவர் தொடர்ந்து நீடிக்க மறுத்தால், வெளியேற்றும் முடிவுக்கும் அணி நிர்வாகம் வந்துள்ளது.
@getty
இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணி அவரை ஒப்பந்தம் செய்யலாம் என்ற தகவல் கசிய, தற்போது PSG அணி நிர்வாகம், வாரத்திற்கு 21 கோடி வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
1 பில்லியன் யூரோ
அதாவது அடுத்த 10 ஆண்டுகளுக்கு என 1 பில்லியன் யூரோ தொகைக்கு புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள PSG அணி நிர்வாகம் தயார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சமூக ஊடகத்தில் PSG அணி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 1 பில்லியன் யூரோ ஒப்பந்தத்திற்கு கைலியன் எம்பாப்பே தகுதியானவரா என PSG அணி ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |