சாதனை படைத்த கைலியன் எம்பாப்பே... பிரெஞ்சு கோப்பை வரலாற்றில் அதிக கோல் மழை
பிரெஞ்சு கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் PSG அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
PSG அணி அபார வெற்றி
திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற PSG மற்றும் Pays de Cassel அணிக்களுக்கிடையேயான போட்டியில் PSG அணி 7-0 என்றம் கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
@getty
பிரான்சின் Lens நகரில் Stade Bollaert மைதானத்தில் இடம்பெற்ற 32 ஆவது சுற்றுப் போட்டியில் தொடர்புடைய சாதனை நிகழ்த்தப்பட்டது. கைலியன் எம்பாப்பே போட்டி முழுவதும் மிகவும் ஆக்ரோசமாக விளையாடி மொத்தமாக 5 கோல்களை விளாசியுள்ளார்.
போட்டி துவங்கிய முதல் 28 நிமிடங்கள் எந்த பரபரப்பும் இன்றி நிதானமாக நகர, 29 ஆவது நிமிடத்தில் முதலாவது கோலினை எம்பாப்பே பதிவு செய்தார். பின்னர் இரண்டாவது கோலினை நெய்மர் 33ம் நிமிடதில் பதிவு செய்ய, நெய்மர் கோல் அடித்த அடுத்த நிமிடமே மீண்டும் எம்பாப்பே மற்றொரு கோலினை விளாசினார்.
எம்பாப்பே கோல்களை விளாச
ஆட்டத்தின் 40 மற்றும் 56ம் நிமிடங்களிலும் எம்பாப்பே கோல்களை விளாச, 64ம் நிமிடத்தில் Carlos Soler ஒரு கோல் அடித்தார். இறுதியாக PSG அணியின் ஏழாவது கோலினை 79ம் நிமிடத்தில் மீண்டும் எம்பாப்பே பதிவு செய்ய, 7-0 என்ற கோல் கணக்கில் PSG அணி அபாரமான் வெற்றியை பதிவு செய்தது.
@getty
PSG அணியில் ஒரே போட்டியில் ஐந்து கோல்களை விளாசிய முதல் வீரராக கைலியன் எம்பாப்பே மாறியுள்ளார். மட்டுமின்றி, PSG அணியில் இதுவரை அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் எம்பாப்பே இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
Edinson Cavani என்பவர் 200 கோல்கள் அடித்துள்ள நிலையில், அதற்கு அடுத்ததாக 196 கோல்களுடன் எம்பாப்பே இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மேலும், இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலுமாக மொத்தம் 23 கோல்களை பதிவு செய்துள்ளார் எம்பாப்பே.