இறுதியில் முடிவை அறிவித்த கைலியன் எம்பாப்பே
ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், அணியை விட்டு விலகுவதாக கைலியன் எம்பாப்பே பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீடிக்க வேண்டும்
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி நிர்வாகம் புதிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது. PSG அணியில் கைலியன் எம்பாப்பே நீடிக்க வேண்டும் என்றே அதன் தலைவரான Nasser Al Khelaifi தெரிவித்துள்ளார்.
@getty
உலகத்தரம் வாய்ந்த வீரர் அவர், அவருக்கான சிறந்த அணி PSG மட்டுமே என Nasser Al Khelaifi கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இருப்பினும், பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி நிர்வாகத்திடம் இறுதியில் தமது முடிவை எம்பாப்பே தெரிவித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
திருப்தியாக இல்லை
இதனிடையே, அவர் வெளியேறுவதற்கான சரியான விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அடுத்த சில மாதங்களில் உறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
24 வயதான எம்பாப்பே Real Madrid அணிக்கு செல்வார் என்றே கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் முன்வைக்கும் ஒப்பந்தத்தில் எம்பாப்பே திருப்தியாக இல்லை என்றே கூறப்படுகிறது. Liverpool மற்றும் Arsenal அணி நிர்வாகமும், எம்பாப்பே மீது குறி வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |