மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எல்.முருகன்
l murugan resigns from central minister: எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எல்.முருகன் ராஜினாமா
2020 முதல் 2021 வரை தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்தவர் எல்.முருகன்.

எல்.முருகன், 2021 ஆம் ஆண்டு முதல் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், எல்.முருகன் தனது மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
It has been the greatest honour of my life to serve Bharat Mata and Tamil Nadu under the leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi Ji. From the son of daily wage labourers to serving in the Union Council of Ministers under the leadership of Hon’ble PM Shri @narendramodi Ji has been the greatest privilege of my life. Now, I wish to return to the grassroots, stand with our karyakartas and dedicate myself full-time to strengthening the BJP in Tamil Nadu ahead of the 2029 Lok Sabha elections. Nation First. Party Next. Self Last. 🙏🇮🇳 @NitinNabin @blsanthosh
— Dr.L.Murugan (@DrLMurugan) October 13, 2026
2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில் கட்சிப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் பாரத மாதாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் சேவை செய்தது என் வாழ்வின் மாபெரும் கௌரவமாகும்.
தினக்கூலித் தொழிலாளியின் மகனாக இருந்து, மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சரவையில் பணியாற்றும் நிலை வரை மோடி அவர்கள் என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாக இருந்துள்ளார்.
இப்போது, நான் களப்பணிக்குத் திரும்பி, நமது தொண்டர்களுடன் துணை நின்று, 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகத் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக என்னை முழுநேரமும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். தேசம் முதலில். கட்சி அடுத்து. சுயநலம் கடைசியில்" என குறிப்பிட்டுள்ளார்.