தலை முடிக்கு டை அடித்த பிரித்தானிய பெண்மணி: அடுத்து நடந்த பயங்கரம்
பிரித்தானிய பெண்மணி ஒருவர், தலைமுடிக்கு டை அடித்ததால், இரண்டு நாட்களுக்கு பார்க்கமுடியாத நிலைமைக்கு ஆளானார்.
டை ஏற்படுத்திய அலர்ஜி
எல்லோருக்கும் எல்லா டையும் ஒத்துக்கொள்வதில்லை. அதனால்தான் பல டை நிறுவனங்கள், தலைமுடிக்கு டை அடிக்கும் முன் அலர்ஜி அல்லது ஒவ்வாமை சோதனை செய்துகொள்ள வலியுறுத்துகின்றன. தற்போது, அனுபவப்பட்ட பிரித்தானிய பெண்மணி ஒருவரும் அதையேதான் கூறுகிறார்.

Image: Kennedy News and Media
பிரித்தானியாவிலுள்ள Southampton என்னுமிடத்தைச் சேர்ந்த Saffron Veal என்னும் பெண், தலைமுடிக்கு சாயம் பூச முடிவு செய்துள்ளார்.
அதன்படி, L'Oreal Paris Casting Creme Gloss hair dye என்னும் சாயத்தை தலைக்கு பூசிக்கொண்டுள்ளார் Saffron. அவ்வளவுதான், சில மணி நேரத்தில் மருத்துவமனையிலிருந்தார் அவர்.

Image: Kennedy News and Media
எச்சரிக்கை
ஆம், தலைமுடிக்குச் சாயம் பூசிய சிறிது நேரத்தில், Saffronஇன் முகம் பலூன் போல ஊதிவிட்டது. முகம் வீங்கிப்போனதால், கண்களைத் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது அவருக்கு.

Image: Kennedy News and Media
விடயம் என்னவென்றால், வீக்கம் கழுத்து, மார்பு வரை பரவி, 10 நாட்களாக, தலைவலியாலும் அவதியுற்றிருக்கிறார் Saffron. அதன் பிறகுதான் வீக்கமும் குறைந்துள்ளது.
ஒருவேளை கண் பார்வை வராமலே போய்விடுமோ என்று கூட பயந்துபோனேன் என்று கூறும் Saffron, ஒவ்வாமை பரிசோதனை செய்யாமல், தயவு செய்து டை அடிக்காதீர்கள் என எச்சரிக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |