காட்டுத்தீயால் பற்றியெரியும் வீட்டுக்குள் நுழைந்த தீயணைப்பு வீரர்? செய்த மோசமான செயல்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வீடுகளை கபளீகரம் செய்துகொண்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக்கொண்டு வீடுகளை சூறையாடும் சம்பவங்கள் தொடர்கின்றன.
பற்றியெரியும் வீட்டுக்குள் நுழைந்த தீயணைப்பு வீரர்?
காட்டித்தீயால் பற்றியெரியும் வீடுகளை சூறையாடும் நபர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிசார் கைது செய்து வருகிறார்கள்.
அவ்வகையில் இதுவரை 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரீஃபான ராபர்ட் லுனா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வீடுகளை சோதனையிட்டுக்கொண்டிருந்த பொலிசார், ஒரு வீட்டுக்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் நிற்பதை கவனித்துள்ளார்கள்.
ஆனால், பின்னர்தான் தெரிந்தது, அந்த நபர் உண்மையான தீயணைப்பு வீரர் அல்ல, தீயணைப்பு வீரரின் சீருடையை அணிந்த திருடன் என்பது.
அந்த வீட்டிலிருந்த பொருட்களை திருடிக்கொண்டிருந்த அந்த நபரை பொலிசார் கையும் களவுமாக கைது செய்துள்ளார்கள்.
எரியும் வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்பதுபோல, இப்படி காட்டுத்தீயைப் பயன்படுத்தி வீடுகளை சூறையாடும் சம்பவங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |