வைரங்களை விற்பனை செய்யும் வெண்டிங் மெஷின் - நகை உலகில் புதிய முயற்சி
Lab diamond vending machine debuts: ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்களை விற்பனை செய்யும் வெண்டிங் மெஷின் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
வைரங்களை விற்பனை செய்யும் வெண்டிங் மெஷின் அறிமுகம்
ஹொங்ஹொங் நகரில் நடைபெற்ற நகை கண்காட்சியில், Premier Impex நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட (Lab-Grown) வைரங்களை விற்பனை செய்யும் வெண்டிங் மெஷின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த மெஷினில், IGI சான்றிதழுடன் கூடிய வைரங்கள் வைக்கப்பட்டுள்ளன. விலை 49 டொலர் முதல் தொடங்குகிறது.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ, நகை உலகில் வைர விற்பனை முறையைப் பற்றி புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
J.R. Dunn Jewelers நிறுவனத்தின் தலைவர் Sean Dunn, “இது அற்புதமான முயற்சி. வைரம் வாங்கும் சிக்கலை முற்றிலும் நீக்கிவிட்டது. ஆனால், மெஷினால் உருவாக்கப்பட்ட வைரத்தை, மீண்டும் ஒரு மெஷின் விற்பனை செய்வது சுவாரஸ்யமான விடயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிலர் இதை வேடிக்கையான முயற்சி என நினைத்தாலும், Premier Impex நிறுவன இயக்குநர் Prerak Mehta, “இது உண்மையான திட்டம். மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெற்றோருக்கு பரிசு கொடுக்க எளிதான வழி தேடுகிறார்கள். இந்த மெஷின் அதற்கான தீர்வாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
தற்போது பைலட் ஸ்டேஜில் உள்ள இந்த மெஷின், விலை மாற்றத்துடன், எதிர்காலத்தில் மால்கள் மற்றும் பெரிய சங்கிலி கடைகளில் வைக்கப்படும்.
முதலில் ஹொங்ஹொங் நகரில் அறிமுகமாகி, பின்னர் உலகளாவிய அளவில் விரிவடையும் திட்டம் உள்ளது. இந்த முயற்சி, நகை விற்பனைக்கு தொழில்நுட்பத்தை இணைக்கும் புதிய வழி எனக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |