பிரித்தானியாவில் இறைச்சி முதலான உணவுப்பொருட்களின் லேபிலில் ஒரு முக்கிய மாற்றம்: பின்னணியில் பிரெக்சிட்
வடக்கு அயர்லாந்தில், சில உணவுகளின் பாக்கெட்களில் ’ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட்டுள்ளது.
ஆஸ்டா பல்பொருள் அங்காடி, முதன்முதலாக இந்த மாற்றத்தை அமுல்படுத்தியுள்ளது.
எதற்காக இந்த லேபில்?
2024 ஆக்டோபர் முதல், இப்படி ஒரு மாற்றம் பிரித்தானியா முழுவதுமே நடைமுறைக்கு வர உள்ளது. இது வட அயர்லாந்துக்கான பிரெக்சிட் 2019 ஒப்பந்தளில் செய்யபடும் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.
பிரெக்சிட்டைத் தொடர்ந்து, அதாவது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, பிரித்தானிய பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
bbc
பிரித்தானியாவின் மற்ற பகுதிகளுக்கும் வட அயர்லாந்துக்கும் இடையில் அமைந்துள்ள அயர்லாந்துக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதி. ஆக, அயர்லாந்து வழியாக வட அயர்லாந்துக்குள் செல்வதும், ஐரோப்பிய ஒன்றியம் வழியாக வட அயர்லாந்து செல்வது போன்றதுதான்.
ஆகவே, வட அயர்லாந்துக்குள் இறைச்சி, பால் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதில் அன்றாடகப் பிரச்சினைகள் உருவாகின.
தீர்வு?
ஆக, இந்த பிரச்சினைக்குத் தீர்வு, வட அயர்லாந்துக்கு அனுப்பப்படும் இறைச்சி, பால் போன்ற பொருட்களில், அக்டோபர் முதல், ’ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட உள்ளது.
GETTY IMAGES
இதனால், ஆவண சரிபார்ப்பு முதலான விடயங்களுக்காக, தேவையற்ற கால தாமதம் தவிர்க்கப்படும் என்பதால், இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. 2025ஆம் ஆண்டிலிருந்து, வட அயர்லாந்துக்கு அனுப்பப்படும் மற்ற பொருட்களின் மீதும் இந்த லேபில் ஒட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |