அவுஸ்திரேலியா தேர்தல்... லேபர் கட்சி ஆட்சியை தக்கவைக்கும் என தகவல்
அவுஸ்திரேலியாவில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடந்துவரும் நிலையில் லேபர் கட்சி ஆட்சியை தக்கவைக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
லேபர் கட்சி
வெளியான தரவுகளின் அடிப்படையில் பிரதமர் அந்தோணி அல்பானீஸின் லேபர் கட்சி 34.6 சதவீத வாக்குகளுடன் ஆட்சியை தக்கவைக்கும் என்றே கூறப்படுகிறது. ஆனால் பீற்றர் டட்டனின் கூட்டணி 31.3 சதவீத வாக்குகள் வரையில் கைப்பற்றும் என்றும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வரும் வரையில் எதிர்க்கட்சியான லிபரல் கட்சித் தலைவர் பீற்றர் டட்டன் வாக்கெடுப்புகளில் முன்னணியில் இருந்தார். அப்போது, விலைவாசி உயர்வு மற்றும் குடியிருப்பு பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு குறித்து அவுஸ்திரேலிய மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால், திடீர் திருப்பமாக லேபர் கட்சி முன்னிலை பெற்றது. ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட அதிருப்தியே பீற்றர் டட்டனின் பரப்புரைகள் எதுவும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
ட்ரம்பின் ஆட்சி
மட்டுமின்றி பிரதமர் அல்பானீஸ் மிகத் தீவிரமான பரப்புரைகளை முன்னெடுத்ததும், லேபர் கட்சியின் வெற்றிவாய்ப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தடை செய்யும் குறுகிய காலக் கொள்கை உட்பட டட்டன் தவறுகளைச் செய்தார்.
மட்டுமின்றி, பீற்றர் டட்டன் அவுஸ்திரேலியாவில் ட்ரம்பின் ஆட்சியை நிறுவ வாய்ப்பு என்பது போன்ற வதந்திகளும் பின்னடைவை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |