புலம்பெயர்ந்தோருக்கு புதிய சிக்கல்? புலம்பெயர்தல் விதிகளில் பிரித்தானியா செய்துள்ள பாரிய மாற்றம்
தொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துவரும் பிரித்தானியாவில், ஆட்சி மாறியும் புலம்பெயர்தல் கொள்கைகளில் முன்னேற்றம் இல்லை.
மாறாக, புலம்பெயர்ந்தோருக்கு சிக்கலை உருவாக்கக்கூடும் என கருதப்படும் பாரிய மாற்றம் ஒன்றை புலம்பெயர்தல் விதிகளில் செய்துள்ளது கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு.
புலம்பெயர்தல் விதியில் பிரித்தானியா செய்துள்ள பாரிய மாற்றம்
பிரித்தானியாவின் காலாண்டு மற்றும் வருடாந்திர புலம்பெயர்தல் புள்ளிவிவரங்கள் இன்று வெளியிடப்பட உள்ளன.
இந்நிலையில், அதற்கு முன், புலம்பெயர்தல் விதிகளில் பாரிய மாற்றம் ஒன்றைக் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பிரித்தானிய அரசு.
அது என்னவென்றால், மீண்டும் மீண்டும் தீவிரக் குற்றங்களில் ஈடுபடும் வேலை வழங்குவோர், இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுக்க தடை விதிக்கப்பட உள்ளது.
இந்த ’தீவிரக் குற்றங்கள்’ என்பவை என்னவென்றால், மீண்டும் மீண்டும் விசா விதிகளை மீறுதல், தேசிய குறைந்தபட்ச ஊதியம் வழங்காமை போன்ற வேலைவாய்ப்புச் சட்டங்களை மீறுதல் ஆகியவை ஆகும் என அரசு வரையறுத்துள்ளது.
ஆனால், மருத்துவ சேவைத்துறையில் வேலை செய்யும் புலம்பெயர்ந்தோர் இத்தகைய விடயங்களால் பாதிக்கப்படுவதால், அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அமைச்சரான சீமா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |