ஆசிய நாடொன்றின் ஊழல் விசாரணையில் சிக்கிய பிரித்தானியாவின் பெண் அமைச்சர்
வங்கதேசத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களில் இருந்து தனது குடும்பம் 3.9 பில்லியன் பவுண்டுகள் வரை மோசடி செய்ததாகக் கூறப்படும் விசாரணையில் லேபர் கட்சி அமைச்சர் ஒருவர் சிக்கியுள்ளார்.
முறைகேடு செய்திருக்கலாம்
கருவூல பொருளாதார செயலாளராக இருக்கும் துலிப் சித்திக் என்பவர் பிரித்தானிய நிதிச் சந்தைகளில் ஊழலை தடுக்கும் பொறுப்பிலும் இருந்து வருகிறார். ஆனால் தற்போது 1 பில்லியன் பவுண்டுகள் வரையில் இவர் முறைகேடு செய்திருக்கலாம் என வங்கதேச அதிகாரிகளின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
வங்கதேசத்தில் புதிய அணுமின் நிலையம் அமைப்பதற்காக 2013-ல் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த திட்டத்திலேயே சுமார் 1 பில்லியன் பவுண்டுகள் கைமாறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணையானது லேபர் அமைச்சர் துலிப் சித்திக்கின் நெருங்கிய உறவினரான ஷேக் ஹசீனா மீது விரிவடைந்துள்ளது. சமீபத்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர் ஷேக் ஹசீனா.
ஹசீனாவின் அரசியல் எதிரியான பாபி ஹஜ்ஜாஜ் கூறிய தொடர் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி ஹசீனா குடும்ப உறுப்பினர்கள் பலர் மீதும் வங்கதேச அதிகாரிகள் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
3.9 பில்லியன் பவுண்டுகள்
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேசத்தில் ஆட்சி செய்தவர் ஹசீனா. கடந்த ஆகஸ்டு மாதம் அவர் நாட்டைவிட்டு வெளியேறியதன் பின்னர் புதிய வங்காளதேச அரசாங்கத்தால் பல குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் பிரித்தானியக் கிளையை நடத்தும் சையத் ஃபாரூக் என்பவர் தெரிவிக்கையில், ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் புனையப்பட்டவை என்றார்.
ஆனால் நீதிமன்ற ஆவணங்களில் 10 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ரூப்பூர் மின் உற்பத்தி நிலையத் திட்டத்திற்கு ரஷ்ய அரசாங்கத்துடன் வங்கதேச அதிகாரிகளுக்கு மத்தியஸ்தம் மற்றும் ஒருங்கிணைக்கும் கூட்டங்களில் துலிப் சித்திக் கலந்துகொண்டார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அந்த திட்டத்தில் 30 சதவிகித தொகையை துலிப் சித்திக் மற்றும் அவரது பிற குடும்ப உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த திட்டத்தில் இருந்து 3.9 பில்லியன் பவுண்டுகள் ஹசீனாவின் குடும்பத்தினராலும் அமைச்சராலும் பறிக்கப்பட்டதாக ஹஜ்ஜாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |