தேர்தலில் தோற்றதால் வெளிநாட்டவர்கள் மீது கோபத்தைத் திருப்பியுள்ள லேபர் அரசு
பிரித்தானியாவில், ஆளுங்கட்சியாக இருந்துகொண்டே, நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் முக்கிய தொகுதிகளைக் கோட்டை விட்டது ஆளும் லேபர் கட்சி.
அந்த கோபத்தை சர்வதேச மாணவர்கள் பக்கம் திருப்பியுள்ளது லேபர் அரசு.
சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்
நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தேர்தல் முடிவுகள் நைஜலின் (Nigel Farage) Reform UK கட்சி பெரும் கவனம் ஈர்த்தது.
குறிப்பாக, லேபர் வசம் இருந்த முக்கிய தொகுதிகள் சிலவற்றை Reform UK கட்சி கைப்பற்றிவிட்டது.
அதனால், லேபர் கட்சியின் தலைமையை, அதாவது, பிரதமராக இருக்கும் சர் கெய்ர் ஸ்டார்மரை மாற்றவேண்டும் என குரல்கள் ஒலிக்கத் துவங்கின.
இந்நிலையில், திடீரென சர்வதேச மாணவர்களைக் கட்டுப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது லேபர் அரசு.
அதாவது, அரசியலில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும், உடனே அதை திசை திருப்ப அரசுகள் எடுக்கும் ஆயுதம் புலம்பெயர்தல்.
அவ்வகையில், லேபர் அரசும், பிரித்தானியாவில் புகலிடம் கோரும் சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அதாவது, லேபர் அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் முதலான சில விடயங்களைச் செய்யத் தவறிவிட்டதால்தான் தங்கள் கட்சி தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |